சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா கவுண்டமணி? வைரலாகும் தகவல்!

காமெடி அரசன் கவுண்டமணி சிவகார்த்திகேயன் படத்தில் இணைவதாக வைரலாக தகவல்!

கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை தக்கவைத்து கொண்டவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் இவர் நடிக்காத முக்கிய நட்சத்திரங்களின் படமே இல்லை என்று கூறலாம். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த இவர் கடந்த சில வருட காலங்கள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

Sivakarthikeyan, Goundamani, Maveeran 18-July-2022

இந்நிலையில் காமெடி அரசன் கவுண்டமணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை படக்குழுவால் வெளியாகவில்லை என்பதும் இந்த தகவல் பொய்யாக இருப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவருடன் கவுண்டமணி இணைந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.