அஜித்தின் ‘ஏகே 61’ படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்! சூப்பர் அப்டேட்

அஜித்துடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

எச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்பட்டது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி போன்ற முக்கிய நடிகர்கள் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

Ajith, AK 61, Ajay 18-July-2022

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுவரை எச். வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர்.

விரைவில் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் அஜய், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith, AK 61, Ajay 18-July-2022