‘புஷ்பா 2’ வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி வாங்கும் பிரமிக்கவைக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா???

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ ஆகிய திரைப்படங்கள் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த முக்கிய திரைப்படங்கள் என்பதும் இவை மூன்றுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அதை விட இருமடங்கு ’புஷ்பா 2’ படத்தில் வில்லனாக நடிக்க வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

புஷ்பா 2’ வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 35 கோடி என்றும் கூறப்படுகிறது. ஹீரோவாக நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளம் வில்லனாக நடிக்க வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது திரை உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay Sethupathi, Pushpa 2, Allu Arjun 17th July 2022
adbanner