நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம் – வழக்கின் விளக்கம்
நடிகர் சந்தானம், ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்துக்கு ‘குலு குலு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானம் தான் பணம் கொடுத்திருந்த ஒரு காண்ட்ராக்டரிடம் அதைத் திரும்ப கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரைத் தாக்கியதாக கூறப்பட்டது. இது குறித்து சந்தானமும் சம்மந்தப்பட்ட நபரும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தபோது நடிகர் சந்தானம் நேரில் ஆஜராகி இருந்தார். ஏற்கனவே சில முறை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தகக்து. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.