ஃபகத் பாசில் நடிப்பில் ரஹ்மான் இசையில் வெளியான அசத்தலான ‘மலையன் குஞ்சு’ டிரைலர்!

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மிரட்டலான ‘மலையன் குஞ்சு’ டிரைலர்!

மலையாள முன்னணி நடிகர் பஹத் பாசில் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு மலையாளம் தாண்டியும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Malayankunju, Fahadh 16-July-2022

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ மற்றும் ‘விக்ரம்’ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாகியிருக்கிறது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலையன் குஞ்சு’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது ‘மலையன் குஞ்சு’ திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு மகேஷ் நாராயணன் கதை எழுதியுள்ள நிலையில், சஜிமோன் பிரபாகர் இயக்கியிருக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.