அல்லு அர்ஜுன் – இயக்குனர் லிங்குசாமி கூட்டணி குறித்து மாஸான தகவல்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் குறித்து வெளியான செய்தி!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி வாரியர்’ திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Allu Arjun, Lingusamy 15-July-2022

ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் நதியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான இந்த படம் லிங்குசாமியின் வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லிங்குசாமியிடம், அல்லு அர்ஜூன் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஏற்கனவே என் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள படம் கைவிடப்படவில்லை. மேலும், அப்படத்திற்கான கதை இன்னும் முடிவாகவில்லை, அதனால்தான் அப்படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜூனை நிச்சயம் இயக்குவேன் என கூறியுள்ளார்.