பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்கும் படம் குறித்த செம அறிவிப்பு!

ஹரிஷ் கல்யாண் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு!

பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Harish Kalyan, Nooru Kodi Vaanavil 15-July-2022

இப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் நாயகி சித்தி இட்னானி நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ‘நூறு கோடி வானவில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்துகுமார் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணிகள் முடிந்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

Harish Kalyan, Nooru Kodi Vaanavil 15-July-2022 001
adbanner