ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான படம்! வைரலாகும் ஸ்டண்ட் வீடியோ

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் அதிரடி காட்சிகளுடன் டைட்டில் வீடியோ வைரல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘விக்ரம்’ பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan, Maaveeran 15-July-2022

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதில், படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பலரையும் ஈர்த்து வருகிறது.