பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் கேட்ட உச்சகட்ட சம்பளம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் ஆரம்பித்தது இந்தி தொலைக்காட்சி தான். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 15 சீசன்கள் அங்கு ஒளிபரப்பாகியுள்ளன. இந்த அனைத்து சீசன்களையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் பலமுறை அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பிய நிலையில், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 16 ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் தனக்கு கடந்த சீசனில் கொடுத்ததை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சல்மான் கான் கேட்டுள்ளார். கடந்த சீசனுக்கு அவருக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த முறை அவர் 1050 கோடி ரூபாய் சம்பளமாக கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.