பிரபல நடிகர் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகரின் இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது!

தமிழ் சினிமாவில் 1980ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் பிரதாப் போத்தன். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிரதாப்.

Pratap Pothen 15-July-2022

இவர் இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’, ‘வெற்றி விழா’ உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ட்ரெண்ட் செட்டிங் படங்களாக அமைந்தவை. பிரபல நடிகை ராதிகாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில், அமலா சத்யநாத் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவாக இருந்து வந்த பிரதாப் போத்தன் தற்போது உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு தற்போது வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது.