அதர்வா நடிக்கும் புதிய படத்தின் செம தகவல்!
கடந்த மார்ச் 11 ஆம் தேதி தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களை பெற்றது.

மாறன் படப்பிடிப்பின் போது இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் தனுஷுக்கும் இடையே வாய்த்தகராறு எழுந்ததாகவும், அதனால் கார்த்திக் நரேன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேரியதாகவும், நடிகர் தனுஷே படத்தின் பல காட்சிகளை படமாக்கியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் ஒருவழியாக படம் முடிந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலிஸானது. ஆனால் படத்துக்காக எந்த ப்ரமோஷனிலும் தனுஷும் இயக்குனர் நரனும் சேர்ந்து கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் ‘மாறன்’ படத்துக்குப் பின்மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்பும் வகையில் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோரை வைத்து ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தை இயக்குகிறார். நேற்று நடிகர் சரத்குமாரின் பிறந்த தினம் என்பதால் அவருக்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.
