‘பொன்னியின் செல்வன்’ விக்ரமின் முக்கிய வீடியோவை வெளியிட்ட லைகா!

விக்ரமின் ‘பொன்னியின் செல்வன்’ புதிய வீடியோ இணையத்தில் வைரல்!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அறிந்ததே.

Vikram, Aishwarya Rai, Ponniyin Selvan 13-July-2022

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோவை சற்றுமுன்னர் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், விக்ரம் தனது ஆதித்ய கரிகால சோழன் கேரக்டருக்கு டப்பிங் பேசும் காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.