மது விருந்தில் கலந்துகொண்ட தல அஜித்! வைரலாகும் புகைப்படம்

சுற்றுலா சென்ற அஜித்தின் மது விருந்து புகைப்படம் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்குமார் இவர் ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், ஒரு மது விருந்தில் அவர் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith, AK 61 13-July-2022

எச். வினோத் இயக்கத்தில், தலஅஜித் மூன்றவாது முறையாக இணைந்துள்ள ‘ஏகே 61’ படத்தின் ஷூட்டிங் புனேயில் நடைபெற்று வரும் நிலையில், அஜித் தற்போது ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால், தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த திரைப்படம் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிபோயுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றுள்ளார். அங்கு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்திருக்க கையில் மதுக்கோப்பையுடன் காணப்படுகிறார்.