சிம்பு குறித்து ஹன்சிகா பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது!
சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகையாக இருந்த ஹன்சிகாவிற்கு, ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான ‘மஹா’ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இப்படத்தில் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில், தற்போது ஒரு வழியாக ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளபடி வரும் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஹன்சிகா, ‘இந்த படத்தில் நான் நடிக்க எனது அம்மாதான் முக்கியக் காரணம். அவர்தான் என்னுடைய 50 ஆவது படமாக ‘மஹா’ இருக்கவேண்டும் எனக் கூறினார். இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ஒரே ஒரு போன்தான் செய்தேன். உடனே நடிக்க சம்மதித்துவிட்டார். அந்தவகையில் நண்பன் சிம்புவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.