உலகநாயகன் கமலின் ‘விக்ரம்’ படம் ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை! குஷியில் ரசிகர்கள்

‘விக்ரம்’ படம் மேலும் படைத்துள்ள புதிய சாதனை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள சூப்பர் ஹிட் படமான ‘விக்ரம்’, ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Vikram OTT 13-July-2022

மேலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது ஓடிடியிலும் படம் வெளியாகியுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி ட்வீட் செய்து வருவதோடு போன் மூலம் அழைப்புவிடுத்தும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ‘விக்ரம்’ திரைப்படம் முதல் வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ராஜகமல் பிலிம்ஸ் ட்விட்டர் மூலமாக அறிவித்துள்ளது.

Kamal Haasan, Vikram OTT 13-July-2022
adbanner