பிரபல நடிகையை சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட காரணம்!
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இப்படத்தை அடுத்து, சிவகார்த்திகேயனின் ‘காக்கிச்சட்டை’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ‘வெள்ளைக்காரத்துரை’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக ஓரம்கட்டப்பட்டிருந்த நிலையில், கடைசியாக அவர் விஷாலின் ‘மருது’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் ‘டைகர்’ என்ற படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவித்யாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு பறிபோனதற்கு அவரே தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது, இயக்குனர்களிடம் தனது சம்பளத்தை ரூபா 50 லட்சத்திற்கும் அதிகமாக கேட்பதாகவும், ஆனால் அவருக்கு அந்தளவு மார்க்கெட் இல்லாததால் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாமல், அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களுடன் தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.