‘தளபதி 67’ படத்தின் டைட்டில் குறித்து வெளியான தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் விரைவில் உருவாகவுள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ’தளபதி 67’ படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

தளபதி 67 படத்தை குறிப்பிட்டு அதற்கு அருகே ’நான் வாழும் உலகம்’ என குறிப்பிட்டுள்ளதால் இதுதான் ’தளபதி 67’ படத்தின் டைட்டிலாக இருக்கும் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் ’தளபதி 67’ படத்தின் திரைக்கதையை இன்னும் லோகேஷ் கனகராஜ் என்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அதை எழுதி முடித்த பின்னர்தான் அவர் டைட்டில் குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

Thalapathy 67, vijay ,Logesh kanagaraj 13th of July 2022