இயக்குனர் பாலா பட நடிகர் காலமானார்! திரையுலகம் அஞ்சலி

பிரபல நடிகர் இன்று காலமானதால் திரையுலகம் சோகத்தில்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா என்பதும் அவர் தற்போது சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

Bala, Ramaraj, Avan Ivan 12-July-2022 002

இந்நிலையில் இயக்குனர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமராஜ். மதுரையில் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராமராஜ் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்திருந்தார்.

Bala, Ramaraj, Avan Ivan 12-July-2022 001

அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து மேலும் சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும், ‘அவன் இவன்’ திரைப்படத்தின் அளவிற்கு அவரின் கதாபாத்திரங்கள் மற்ற படங்களில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bala, Ramaraj, Avan Ivan 12-July-2022

இதையடுத்து தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு 72 வயது என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.