வெளிவந்த சூர்யாவின் ‘வணங்கான்’ படம் குறித்த முக்கிய தகவல்!
இயக்குனர் பாலா – சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 41வது படமான ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.

நேற்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் தமிழில் ‘வணங்கான்’ என்றும் தெலுங்கில் ‘அச்சாலுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இருமொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எழுத்தாளரும், இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பருமான ஜெயமோகன் ‘வணங்கான்’ என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். இப்போது பாலாவின் படத்தின் பெயரும் வணங்கான் என்று இருப்பதால், ஜெயமோகனின் கதையைத்தான் இயக்குனர் பாலா படமாக எடுக்கிறாரோ என்ற சந்தேகம் பலர் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பாலா ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என்னும் நாவலை தான் ‘நான் கடவுள்’ திரைப்படமாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.