‘விக்ரம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய பிரபல பிரமாண்ட இயக்குனர்! என்ன சொன்னார் தெரியுமா??

‘நான் லோகேஷ் படங்களின் ரசிகன்’ புகழ்ந்து தள்ளிய பிரபல பிரமாண்ட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்த படம் ‘விக்ரம்’. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, நரேன், பகத்பாசில் மற்றும் ரோலக்ஸ் என்ற சிறப்புத்தோற்றத்தில் சூர்யாவும் நடித்திருந்தனர்.

Kamal Haasan, Prashanth Neel, Vikram 12-July-2022 001

இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று, இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இதுவரை ரூபா 410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை விக்ரம் படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது பலர் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kamal Haasan, Prashanth Neel, Vikram 12-July-2022

இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தைப் பார்த்த கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தனது டிவிட்டர் பக்கத்தில், இப்படத்தில் கமல், பகத்பாசில், விஜய்சேதுபதி என எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனிருத் இசையில் ராக் ஸ்டார் தான்.லோகேஷின் படங்களுக்கு நான் எப்போதும் ரசிகன். அன்பறிவின் சண்டைக்காட்சி பிரமாதமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

adbanner