சூர்யா – பாலா கூட்டணி படத்தின் மாஸான டைட்டில் அறிவிப்பு!
சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த படத்திற்கு ‘வணங்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த டைட்டில் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் வைரலாகி வருகிறது. சூர்யாக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
