உதயநிதி குறித்து மனைவி கிருத்திகா கலாய்ப்பேச்சு!
உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பது குறித்த கேள்வி எழும்பியது. அதற்கு பதிலளித்த போது “இந்த படத்தை பற்றி ஏதாவது கூறினால் மாரிசெல்வராஜ் என்னை போன் போட்டு திட்டுவார் என்றும் அதனால் எதுவும் கூறமுடியாது என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் உதயநிதியை நன்றாக மாரி செல்வராஜ் பிழிந்து எடுக்கிறார் என்று கேள்விப்பட்டேன் என்றும் என்னால் முடியாததை அவர் செய்கிறாரே என்பதை நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கலகலப்பாக தெரிவித்தார். மேலும் தங்களது மகன் இன்பநிதி தற்போது தமிழ் படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும் ‘பீஸ்ட்’ படத்தை அதிகாலை 4 மணி காட்சிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில காலமாக அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஆனாலும் இப்பொழுதுதான் பிளஸ் 2 முடித்திருக்கின்றாய், முதலில் டிகிரியை முடி, நடிப்பது ஒன்றும் அவ்வளவு ஈசி கிடையாது என்றும் நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மாட்டோம் என்றும், அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ, அதுவாகவே ஆகட்டும் என்று நாங்கள் விட்டு விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.