அடுத்த படத்துக்காக கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் புகைப்படம்

சிவகார்த்திகேயனின் புதிய தோற்றத்தில் புகைப்படம் வைரல்!

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan, Kiara Advani 11-July-2022 001

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் புதிய தோற்றத்துக்கு தன்னை மாற்றியுள்ளார். அதிகமாக முடிவளர்த்து இளமையான தோற்றத்துக்கு அவர் மாறியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan, Kiara Advani 11-July-2022