மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் வெளியான அசத்தலான அப்டேட்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu, Udhayanidhi, Keerthy Suresh, Maamannan, Tamil Cinema 11-July-2022

தற்போது ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் சமீபத்தில் வெளியானது. படத்தில் ‘மாமன்னன்’ என்ற டைட்டில் ரோலில் வடிவேலு நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாகதான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம்.

சேலத்தில் நடந்து முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று கூறப்படுகிறது.