சென்னையின் பிரபல இடத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பு! வைரல் ஆகும் புகைப்படம்

‘ஏகே 61’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகிறது என்று கூறப்டுகிறது.

AK 61, Ajith, Tamil Cinema 11-July-2022

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்போது அஜித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் எச். வினோத். முன்னதாக சென்னையின் பிரபல மால் ஒன்றில் ஷூட் நடந்தது. அதையடுத்து தற்போது காசிமேடு பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

AK 61, Ajith, Tamil Cinema 11-July-2022
adbanner