வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அசத்தலான அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்

வடிவேலு படத்தின் வெளியான சூப்பர் தகவல்!

சுராஜ் இயக்கத்தில், வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது.

Vadivelu, Naai Sekar Returns, Tamil Cinema 11-July-2022

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் ப்ரமோஷனாக படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் இந்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பாடலில் வடிவேலுவின் நடனக் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்தியால் ரசிகர்கள் இப்படத்துக்கு பாடல்களுக்கும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version