1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கும் ஹிருத்திக் ரோசன் படம்!

ஷங்கர் – ஹிருத்திக் ரோசன் கூட்டணியின் பிரமாண்ட படம் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் –கியாரா அத்வானி நடிப்பில் ‘ஆர்.சி 15’ படத்தை இயக்கி வருகிறார்.

Hrithik Roshan, Ram Charan, Tamil Cinema 11-July-2022

இந்த படத்தை 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா மிரட்ட உள்ளார். மேலும் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை முடித்த பிறகு, ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். இப்படங்களை முடித்தபின், எந்திரன் படத்தை போன்று ஒரு நீருக்கடியில் அறிவியல் என்ற படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத வகையில் ரூபா 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படம் ஹிருத்திக் ரோசன் – ராம் சரண் கூட்டணியில் உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது.