விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்பில் பிரபல நடிகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட ராஷ்மிகா! வைரல் போட்டோ

‘வாரிசு’ படப்பிடிப்பில் பிரபல நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ரஷ்மிகா!

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rashmika, Sangeetha, Varisu, Tamil Cinema 09-July-2022

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வந்தது. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இப்போது ராஷ்மிகா படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடன கலைஞரும், நடிகையுமான சங்கீதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சங்கீதாவும் ‘வாரிசு’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

Rashmika, Sangeetha, Varisu, Tamil Cinema 09-July-2022