விஜய் – மகேஷ் பாபு நடிப்பில் மணிரத்னம் இயக்க இருந்த படம்! தவறியதற்கு இதுதான் காரணம்

விஜய் – மகேஷ் பாபு மணிரத்னம் படத்தில் நடிக்க தவறியதற்கான காரணம் குறித்த தகவல்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay, Mhesh Babu, Tamil Cinema 09-July-2022

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் மணிரத்னம், “கடந்த 1980, 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்தேன். இந்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை” என்றும் பேசினார்.

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு மணிரத்னம், இயக்குனர் வசந்துடன் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை எழுதி அதை படமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்தவகையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யும், அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் சில காரணங்களால் அப்போது படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளைதான் விஜய் பின்னர் துப்பாக்கி படத்துக்காக கொடுத்து அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அந்தவேளையில் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.