கோப்ரா படத்தின் மஸான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக அதிக பட்ஜெட் படமாக ‘கோப்ரா’ உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்ததை, படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிலையில் ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது தெரிந்ததே.
இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவர் பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நேற்றிரவு கோப்ரா இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் விக்ரம் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.