‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ உரிமம் இத்தனை கோடியா? வரலாறு காணாத தொகை!

‘பொன்னியின் செல்வன்’ ஆடியோ உரிமையை பெரும் தொகைக்கு பெற்றுள்ள நிறுவனம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ponniyin Selvan, Tamil Cinema 08-July-2022

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஐந்து மொழிகளுக்கான ஆடியோ உரிமையை TIPS பிலிம்ஸ் & மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமம் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.