நடிகர் விக்ரமுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் திடீர் அனுமதி – பரபரப்பான தகவல்!

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chiyaan Vikram, Tamil Cinema 08-July-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அனைத்து சமூக வலைத்தளங்களூடாக விக்ரமின் ரசிகர்கள் மற்றும் பலர் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.