டீஸர் குறித்து வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ஜெயம் ரவியின் மஸான போஸ்டர்!
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கு வர தயாராகியிருக்கும் நிலையில் தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் போஸ்டரும் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் வகையில், முன்னதாக நந்தினி, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோரின் போஸ்டர்கள் வெளியான நிலையில், இன்று கதையின் முக்கிய கதாப்பாத்திரமான ராஜராஜசோழனின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி இந்த படத்தில் ராஜராஜசோழனாக நடித்துள்ளார். இன்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் டீஸர் வெளியீடு குறித்த தகவலையும் அறிவித்துள்ளனர்.
Hail the Visionary Prince, the Architect of the Golden Era, the Great Raja Raja Chola…introducing Ponniyin Selvan! #PS1 TEASER OUT TODAY AT 6PM.@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial pic.twitter.com/pNukbhu0nY
— Lyca Productions (@LycaProductions) July 8, 2022