தமிழ் சினிமாவில் சாதனை படைத்த ‘விக்ரம்’ படத்தின் அதிகாரபூர்வமான ஓடிடி ரிலீஸ்!

வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள சூப்பர் ஹிட் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 08-July-2022

மேலும் திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலீஸூக்கு முன்பே விக்ரம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ரிலீஸூக்குப் பின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் அந்த லாபம் 127 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இது தவிர படத்துக்காக கமல்ஹாசனின் சம்பளத்தையும் சேர்த்தால் லாபம் உச்சம் தொட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்து மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘விக்ரம்’ திரைப்படம் நள்ளிரவு 12 மணி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஓடிடியில் வெளியானாலும் இன்னமும் சில திரையரங்குகளில் ‘விக்ரம்’ திரைப்படம் ஓரளவான சினிமா ரசிகர்கள் வருகையோடு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தகக்து.

adbanner