படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காத சிம்பு பட பிரபல நடிகை!

சிம்பு பட நடிகை படப்பிடிப்பின் போது போட்ட கண்டிஷன்களால் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

Simbu, Hansika, Maha, Tamil Cinema 08-July-2022 001

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததுடன், ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் தற்போது குறைந்த பட்ச படங்களையே கைவசம் வைத்துள்ள நடிகை ஹன்சிகா, சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அப்படத்தில் நடிக்க அவருக்கு ரூபா 1.30 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படப்பிடிப்பின்போது, அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், அவர் பல கண்டிஷன்களை விதித்து வருவதாகவும், அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.