வெப் சீரிஸுக்கு தனி சம்பளம் – விஜய் சேதுபதியின் எகிறும் மார்க்கெட்!

வெப் தொடரில் நடிக்க விஜய் சேதுபதி போடும் கண்டீஷன்!

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. பல்வேறுபட்ட கதாபாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Vijay Sethupathi, Tamil Cinema 07-July-2022

சமீப காலமாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக பெரும் புகழை பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘விக்ரம்’ மற்றும் ‘மாமனிதன்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் அவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிக தொகையை வெப் தொடர்களுக்கு வாங்குகிறாராம். சமீபத்தில் ஒரு வெப் தொடருக்காக 35 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதில் இருந்து இனி விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேற லெவலில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகிறது.