சூர்யா- சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான தகவல்! சத்தமில்லாமல் வேலைபார்க்கும் படக்குழு

சூர்யா- சிறுத்தை சிவா படம் குறித்து வெளியான செம அப்டேட்!

கார்த்தி நடிப்பில் ‘சிறுத்தை’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றவுடன் இயக்குனர் சிவா – சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் நடந்தது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அந்தவேளை அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.

Suriya, Siva, Tamil Cinema 07-July-2022

இந்நிலையில் சூர்யா தற்போது பாலாவின் ‘கடலாடி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில், சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்த இந்த படத்தை தற்போது தில் ராஜு தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், மற்றொரு செய்தியாக தில் ராஜு பைனான்ஸ் மட்டுமே செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியின் படம் ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.