பிரபல நடிகருடன் மீண்டும் தமிழ் சினிமாவில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை!
சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி, சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக சுட்டித்தனமான அவரது நடிப்பின் அழகை வெளிப்படுத்தி நடித்திருந்தார். அதை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்திருந்த நிலையில், அவ்வளவாக வரவேற்க படவில்லை. அதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

இதனால் தமிழ் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருந்தார். கடைசியாக அவர் விஷால் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தற்போது நீண்ட ஆண்டுகள் இடைவெளியின் பின் விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் ‘டைகர்’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்துக்கு இயக்குனர் முத்தையா திரைக்கதை எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.