‘இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்கள்..’ கார்த்தியின் நகைச்சுவையான பதிவு!

நடிகை த்ரிஷாவிற்கு கார்த்தியின் நக்கலான பதிவு!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று சிறப்பு மிக்க படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனையே திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையிட தயாராக உள்ளது.

Karthi, Trisha, Ponniyin Selvan, Tamil Cinema 07-July-2022

‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. அந்த வகையில் படத்தில் குந்தவையாக நடிக்கும் திரிஷாவின் லுக்கை இப்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், “இளவரசி லைவ் லொகேஷன் அனுப்புங்க… உங்க அண்ணனின் ஓலையை கொடுக்கணும்.” என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். நாவலில் வந்தியத் தேவன் கதாபாத்திரம், ஆதித்த கரிகாலனின் ஓலையை குந்தவையிடம் கொடுக்க வருவதுதான் தொடக்கமாக இருக்கும். அதைக் குறிப்பிட்டு நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.