ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் செம்ம த்ரில்லர் ‘டிரைவர் ஜமுனா’ டிரைலர்!

பலரை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ அதிரடியான டிரைலர்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்து பயணித்துக்கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ‘டிரைவர் ஜமுனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றன.

Aishwarya Rajesh, Driver Jamuna, Tamil Cinema 07-July-2022 001

டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Aishwarya Rajesh, Driver Jamuna, Tamil Cinema 07-July-2022

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா நடிக்க, வாலாஜாபாத்தில் இருந்து இசிஆர் செல்லும் ஒரு ரைடின் போது ஐஸ்வர்யா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரில்லருடன் கூடிய விறுவிறுப்பாக டிரைலரில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

adbanner