அஜித் தவிர்ந்து நடைபெறும் படப்பிடிப்பு! வைரலாகும் ‘ஏகே 61’ படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம்!

‘ஏகே 61’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்!

தல அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி, ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ajith, AK 61, Tamil Cinema 07-July-2022

இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் செய்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகின்றோம். அந்தவகையில் அஜித் ஐரோப்பா பயணத்தை முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மீதியுள்ள படப்பிடிப்புக்களில் எடுக்கப்போகும் காட்சிகளில் அஜித் வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்கான அவரது கெட்டப்பை முற்றாக மாற்ற உள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன.

இந்நிலையில் அஜித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் எச். வினோத். அதில், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Ajith, AK 61, Tamil Cinema 07-July-2022 001