‘பிசாசு 2’ குறித்து ஆண்ட்ரியா வெளியிட்ட செம வீடியோ!

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ‘பிசாசு 2’ குறித்து வெளியான சூப்பர் தகவல்!

பாடகியான ஆன்ட்ரியா தமிழில் 2007 இல் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். பல திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

Andrea Jeremiah, Pisasu 2, Tamil Cinema 07-July-2022

இவரது நடிப்பில் வெளிவந்த ‘வட சென்னை’, ‘தரமணி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது ஆன்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிசாசு 2’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கும் ஆண்ட்ரியா தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். முதல் முறையாக தெலுங்கில் ஆண்ட்ரியா டப்பிங் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான வீடியோ ஒன்றை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

adbanner