பிரபல நடிகரின் யூடியூப் சேனலை உதயநிதி வாங்குகிறாரா?

உதயநிதி கைப்பற்ற இருக்கும் பிரபல நடிகரின் யூடியூப் சேனல்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி வகிக்கும் இளம் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியயாகவும் அமோக வெற்றிபெற்றது.

Udhayanidhi, Sivakarthikeyan, Tamil Cinema 07-July-2022

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்க, சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின், அவரது நடிப்பில் ‘பிரின்ஸ்’, ‘அயலான்’ போன்ற படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில், ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிக பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் மேலும், இந்த யூடியூப் சேனலை நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலின் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.