ரூட்டை முற்று முழுதாக மாற்றுகிறாரா விஜய் சேதுபதி?

தமிழ் கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தவர், கொடுக்கின்றவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மேலும் சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ திரை படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பின்னர் ’விக்ரம் வேதா’ ’செக்கச் சிவந்த வானம்’ ‘பேட்ட’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார் மக்கள் செல்வன்.

Vijay Sethupathi 6th July 2022

இந்த நிலையில் மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் ராணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை படக்குழுவினர் அணுகி இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஒன்று இரண்டு படங்கள் என தொடங்கி விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் அதிகரித்து வருகின்றமை கதாநாயகனாக அவரை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

adbanner