‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் தள்ளிப்போனது எதற்கு? பின்னணியில் பிரபல நிறுவனம்

‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் தள்ளிப்போனது குறித்த பரபரப்பான செய்தி!

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இத் திரைப்படத்துக்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு, கௌதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

Simbu, Vendhu Thanindhathu Kaadu, Tamil Cinema 05-July-2022

சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்கிற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகஸ்ட் 31 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதற்கும் காரணம் அமேசான் ப்ரைம் நிறுவனம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘விருமன்’ படத்தையும் அமேசான் ப்ரைம் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது.

ஆகவே இரு படங்களும் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸாவதை தடுப்பதற்காக ரிலீஸ் தேதியை மாற்ற அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.