தள்ளிப்போகும் மடோன் அஸ்வின் படம் – திரைக்கதையை மாற்றும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் இயக்குனர் மடோன் அஸ்வின் படம் தாமதம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பல படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘டான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். மற்றும் ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Sivakarthikeyan, Madonne Ashwin, Tamil Cinema 04-July-2022

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘விக்ரம்’ பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன், திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளதாகவும், அதை முடிக்கும் பணியில் இயக்குனர் மடோன் அஸ்வின் மும்மரமாக ஈடுபட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.