சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் நாயகி குறித்த செய்தி!
சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் ஓர் திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்புதான் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் நாயகியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டால், இப் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாத பூஜாவுக்கு சூர்யா பட வாய்ப்பு கிடைக்க இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.