‘ஜெயிலர்’ படத்தில் இணையும் முக்கிய நடிகர்! உற்சாகத்தில் ரசிகர்கள்

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இயக்குனர் நெல்சனின் மூன்று படங்களிலும் நடித்த ஆஸ்தான நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Jailer, Rajinikanth, Yogi Babu, Tamil Cinema 04-July-2022

ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. அந்தவகையில் இயக்குனர் நெல்சன் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வுகளில் இருக்கும் நிலையில், அவர் ஏற்கனவே இயக்கிய 3 திரைப்படங்களிலும் நடித்த யோகி பாபு, ‘ஜெயிலர்’ படத்திலும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Jailer, Rajinikanth, Yogi Babu, Tamil Cinema 04-July-2022 001

நெல்சனின் மூன்று படங்களிலும் யோகிபாபுவுக்கு செம கேரக்டராக இருந்த நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ படத்திலும் நடிகர் யோகிபாபுவுக்கு ரஜினியுடன் டிராவல் செய்யும் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.