யானை – விமர்சனமும் ஊடகத் தளங்களின் கணிப்பும்

Yaanai Movie Review

தமிழ் சினிமாவில் வெற்றி கமர்சியல் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ள இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது யானை திரைப்படம். பெரிய எதிர்பார்பிற்கு இடையே யானை திரைப்படம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

Yaanai Movie Review 3rd Jul

ஹீரோ அருண் விஜய்யின் செல்வாக்கு மிக்க பாசமான PRV குடும்பத்தின் மற்றைய சகோதரர்கள் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ். இவர்களின் தீராத பகையாளிக் குடும்பம் ஜெயபாலன் குடும்பம். இக் குடும்பத்தை சேர்ந்த ராமசந்திர ராஜு(KGF) ஹீரோ அருண் விஜய் குடும்பத்தை பழிவாங்க காத்திருக்கிறார். இதனிடையே அருண் விஜய்யின் அண்ணன் மகளான அம்மு அபிராமியின் காதல் பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்பு அவர் குடும்பத்தை ராமசந்திர ராஜுவிடம் இருந்து காப்பாற்றினாரா? பாசமான குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹீரோ அருண் விஜய் குடும்ப பாசம், காதல், ஆக்ஷன் என எல்லாவற்றையும் தன் தோள் மேல் தூக்கி சுமந்து இருக்கிறார். குறிப்பாக அவரின் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்கிறது. ஹீரோயின் பிரியா பவானி சங்கர் பாடல்கள் தவிர மற்றையவற்றில் நடிப்பில் அசத்துகிறார். சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் அநுபவ நடிப்பைக் காட்டியுள்ளனர். KGF ராமசந்திர ராஜு வில்லத்தனத்தில் தியேட்டரை அதிர வைக்கிறார். ஜெயபாலன், போஸ் வெங்கட், அம்மு அபிராமி ஆகியோர் தமது பாத்திரதத்தை சரிவர செய்திருக்கிறார்கள். ஒரு சில இடங்கள் தவிர யோகி பாபு பெரிதாக எடுபடவில்லை.

ஹரி வழமையான பாணியில் கமர்ஷியல் படத்துக்கான ஆக்ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் என படத்தை தந்துள்ளார் . ஹரியின் பஞ்ச் வசனங்களுக்கு படத்தில் குறைவில்லை. வேகமான திரைக்கதைக்கு பொருத்தமற்ற நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைக் குறைத்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளின் BGM வேறு லெவல். கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுவாக இருக்கிறது. மொத்தத்தில் ‘யானை’ சுமாரே.

முன்னணி தளங்களின் கணிப்பு இதோ…

SitesPoints /5Links
Indiaglitz2.75Link
Behindwoods2.5Link
Pinkvilla3Link
Timesofindia3.0Link
The HinduLink
Galatta2.75Link
Tamil TalkiesYoutubeLink