தனுஷின் அடுத்த படத்தை கையில் எடுத்த தயாரிப்பு நிறுவனம்! மாஸ் அறிவிப்பு

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிரடி அப்டேட்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள ‘தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ மற்றும் ‘வாத்தி’ திரைப்படங்களின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ளது என்பதும் விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush, Sathya Jyothi Flims, Tamil Cinema 02-June-2022

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் கடும் உற்சாகத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, Sathya Jyothi Flims, Tamil Cinema 02-June-2022 001

ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ‘மாறன்’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.